Friday 20 July 2012

wi --fi பற்றி சில தகவல்கள்


Wi-Fi என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிகக்குறியீடு ஆகும்.இத்தொழில்நுட்பம் இன்று பரவலாக பல இடங்களில் உபயோகத்தில் இருந்து வருகிறது. இதன் விரிவாக்கம் - வயர்லெஸ் ஃபிடெலிடி - Wireless Fidelity - என்பதாகும். இத்தொழில் நுட்பம் Wi-Fi Alliance என்பதால் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இத்தொழில் நுட்பமானது Radio, Television, Computer, Cell Phone என பலவகைப்படுத்தப் பட்ட சாதனங்களில் பல்வேறு அலைவரிசைகளில் உபயோகப் படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

இந்த Wi-Fi -க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) முதல் 5 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) வரையிலான அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுகிறார்கள். வினாடிக்கு 11 மெகா பைட் (Mega Byte) முதல் 140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தவல்ல திறன் கொண்டதும் கூட.

Wi-Fi Signal logo
இத்தொழில் நுட்பம் மூலம் Computers, Printers, Laptop மற்றும் Cell Phone போன்றவைகளுக்கிடையே Wireless முறையில் தொடர்பை ஏற்படுத்திட முடிகிறது.

இணைய பயன்பாட்டிற்காக, Wi-fi Access Point -என்ற சேவையை, பல கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் அமைத்திருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Wi-Fi access point
Modem




மேலும் இணைய இணைப்புக்காக பயன் படுத்தப்படும் Modem களில், கூட, Wi-Fi Router பொருத்தப் பட்டுத் தான்விற்பனைக்கு வருகின்றன. இவ்வகை Modem -களை தான் சிறு நிறுவனங்களிலும், வீடுகளிலும் வாங்கி பயன்படுத்துகிறோம்.
இந்திய அளவில், Mysore -நகரம் தான் (2004 -லில்) Wi-Fi - ஐ பெற்ற முதல் நகரமாகவும் (India's first Wi-Fi enabled city); உலகளவில் ஜெருசலத்துக்கு அடுத்து இரண்டாவது நகரமாகவும் (second in the world after Jerusalem) அறியப்படுகிறது.

USB wireless adapter
சமீப காலங்களில் USB wireless adapter -கள் விற்பனைக்கு வந்து விட்டதால், இவைகளையும் வாங்கி Computer -ரில் செருகி இணையத்தை பயன்படுத்தி வருவதும் அதிகமாகி உள்ளது.


Wi Fi Network

இத் தொழில் நுட்பம் சிறந்ததாக கருதப்பட்டாலும் சில பாதுகாப்பு குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. Hacker -கள் இவ்வகையான Network -களை எளிதாக ஆக்கிரமிப்பு செய்து பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடி, நாசவேலைகளில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் நிரம்பவே இருக்கிறது. இந்நெட்வொர்க்கின் எல்லைக்குள்ளாக இருந்தும், கூட, அந்நெட்வொர்க்கை Hack செய்வது சுலபம். அப்படி Hack செய்வதற்கான Software -களும் இணையத்தில் இலகுவாக கிடைப்பதென்னவோ உண்மை.

போலியாக, அதாவது தற்காலிக முறையில், Wi-Fi நெட்வொர்க்கை உருவாக்கியும் அல்லது எதேச்சையாக கிடைக்கும் Wi-Fi நெட்வொர்க்கிலும் புகுந்து அண்டை வீட்டு கணினிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்கள் திருடுவது போன்ற பல வழிமுறைகளும் கையாளப்படுகின்றன.

ஆக, Wi-Fi நெட்வொர்க்குகளை, எவரும் அணுக முடியாமல் தடுக்க, அதன் Rooter -ரில் Password -ஐ சற்று கடினமானதாக அமைப்பது நல்லது. அத்துடன், நெட்வொர்க்கிற்கான Security Setup -ஐயும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். சிறு நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் Modem -களுக்கு இவை பொருந்தும்.

Desk Top, Lap Top, Tablet PC, Printer, Smart Phone போன்றவைகளை, எப்பொழுதும் Wi-Fi நெட்வொர்க்கிலேயே வைத்திருக்க விரும்பினால், அதற்கு ஏற்றாற்போல் Filter -களை அமைத்துக்கொள்வது நல்லது. திறந்தநிலை நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கின்ற (Automatic Access) தானியங்கி அமைப்புகள் செயற்பாட்டில் இருந்தாலும் அவைகளின் செயற்பாட்டையும் நிறுத்தி வைப்பது நலம் பயக்கும். அத்துடன், நெட்வொர்க்குகளுக்கு அவசியமான Firewall போன்ற கூடுதல் பாதுகாப்பு வளையங்களையும் ஏற்படுத்துதல் அத்தியாவசியமானது.